வடக்கை அழகுபடுத்தும் செயற் திட்டம்; போலி பிரச்சாரம் வேண்டாம்- கேணல்

வடக்கு மாகாணத்தை அழகுபடுத்தி முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சமூக பாதுகாப்பு பிரிவின் வடமாகாண இணைப்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்,

வடக்கினை அழகுபடுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக சித்திரங்கள் வரைகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த சித்திரங்களானது அந்தந்த பகுதியினை பிரதிபலிக்கின்ற கலாச்சாரங்களை உள்ளடக்கியதாகவே அமையும். ஆகவே வீணான போலி பிரசாரங்களை செய்ய வேண்டிய தேவையில்லை. இத்திட்டத்திற்கான அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் - என்றார்.

No comments