26நாட்களில் 13 ஊடகவியலாளருக்கு சிகிச்சை!


கோத்தபாய ராஜபக்ச பதவிக்கு வந்து 26 நாட்களில் பதின்மூன்று பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கையின் சமூக வலைப்பின்னல் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் நுவான் நிரோதா தெரிவித்தார்.
இதன் படி பார்த்தால் , இரண்டு நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் துன்புறுத்தப்படுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்
இந்த 26 நாட்களில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பத்திரிகையாளர் தமன் என்பவரும் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுடன் இடம்பற்ற சந்திப்பில் நியாமான விமர்சனங்களுக்கு இடமளிக்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய தெரிவித்தார். இந்த நிலையில் நியாயமான விமர்சனத்துக்கு என்ன வரைவிலக்கணம் கோத்தபாய வைத்துள்ளார் என்று பத்திரிகையாளர்கள்
நகைச்சுவையாக பேசிகொண்டுள்ளனர்

No comments