வைத்தியசாலைக்குள் ராஜித தடுத்து வைப்பு

சிஐடியினரால் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் சிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனை ராஜிதவின் சட்டத்தரணி உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று (26) மாலை நாரஹன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று பின்னிரவு அங்கு சென்ற சிஐடியினர் ராஜிதவிடம் விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்நிலையிலேயே அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments