வெள்ளை வான் சாரதிகளுக்கு தொடர்ந்தும் மறியல்

வெள்ளை வான் சாரதிகள் என்று அறியப்படும் இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் இன்று (27) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இருவரையும் ஜனவரி 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு கொழும்பு மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

பின்னணி,

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்த வெள்ளை வான் ஊடக சந்திப்பில் குறித்த இருவரும் வெள்ளை வான் மனிதக் கடத்தல் தொடர்பில் பதற வைக்கும் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இதனடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் ராஜித சேனாரத்ன எழுதிக் கொடுத்த பொய்களையே தாம் வெளியிட்டதாக சிஐடியில் வாக்குமூலம் அளித்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments