மணல் கடத்தலுக்கு எதிராக வீதி மறியல்

கிளிநொச்சி - இயக்கச்சி பிரதேசத்தில் பிரதான வீதியை முடக்கி மக்கள் இன்று (14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்கச்சி பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியே இந்த போராட்டத்தை பிரதேச மக்கள் முன்னெடுத்தனர்.

குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்று கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments