அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொது சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திருவுருவ படத்திற்கான மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா ஆகியோர் அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

No comments