அதிக விலைக்கு இறைச்சி விற்றால் கடும் விளைவு

ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள இறைச்சிக் கடைகளின் சுத்தம், சுகாதாரம், இறைச்சி விலை, கால் நடைகளை மனிதாபிமானத்துடன் நடாத்துதல் போன்றவை மற்றும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பான கலந்துரையாடல் சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது சுத்தம், சுகாதாரம் தொடர்பாக புதிய அரசாங்கத்தின் தெளிவான கொள்கைகளையும் அதனை புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும், கண்கானிக்கும் பொறிமுறைகள் தொடர்பாக சபையின் செயலாளரினால் சபையில் உள்ளோர்க்கு விளக்கமளிக்கப்பட்டது.

பல்வேறு கருத்துக்களின் பின்னர் கீழ்வரும் தீர்மானங்கள் இப் பிரதேச மக்களின் நலன் கருதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இறைச்சிக் கடைகளை முறையாகவும், சுத்தமாகவும் பேணுதல்? நிறுவையினையும், தராசுகளையும், உடனடியாக பரிசோதனைக்குட்படுத்துதல் மற்றும் இம்மாதம் 10ஆம் திகதி முதல் இறைச்சிக் கடைகளில் எலும்பில்லாமல் ஒரு கிலோ இறைச்சி ரூபா 700 ரூபாவிற்கு விற்பனை செய்தல்.

இதற்கு மேலதிகமாக விலைத்தளம்பல், கால்நடைகளின் தட்டுப்பாடு, இறைச்சிக்கடை நடாத்துனர்கள், கால்நடை வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சபையினுடனும், சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் இணக்கப்பாடாக பேசி தீர்த்துக் கொள்ள ஒன்பது பேரினைக் கொண்ட சங்கமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது

இப் பிரதேச மக்களின் நலன்கருதி எலும்பற்ற ஒரு கிலோ இறைச்சியினை 700 ரூபாவிற்கு விற்பதற்கு முன்வந்துள்ள இறைச்சிக்கடை நடாத்துனர்கள், கால்நடை வியாபாரிகள் ஆகியோருக்கு தவிசாளர் சபையின் பிரதிநிதிகள் சார்பாகவும், இப் பிரதேச மக்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு, விலையில் யாரேனும் சபையுடன் கலந்தாலோசிக்காது உயர்தினால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.டி.அஸ்மி வலியுறுத்திக் கூறினார்.

No comments