வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட ரகுநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குவில், சத்துருக்கொண்டான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன் நேரில் சென்று இன்று பார்வையிட்டார்.

கொக்குவில் பிரதேசத்தில் 55 குடும்பமும், சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 50 குடும்பமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உறவினர்கள் வீட்டில் வசித்து வருவதாகவும், இவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கும் முகமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சபை உறுப்பினர் க.ரகுநாதன் தெரிவித்தார்.

No comments