இராணுவத்தால் வன்புணரப்பட்ட அறுவர்- அதிர்ச்சித் தகவல்

சித்திரவதையால் ஏற்பட்ட சேதங்களுக்காக அமெரிக்காவில் கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடுத்த பதினொரு இலங்கையர்கள்,  ராஜபக்ச ஜனாதிபதியாக  தண்டனையில் இருந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதிலிருந்து அவரை தடுக்கும் அதேவேளையில் தமது வழக்கினைப் பின்வாங்கிக் கொள்ளும் தந்திரோயாபமாக முடிவினை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நகர்வானது அவர் பதவியை விட்டுச் சென்ற பின்னர் வழக்கினை மீளத்தாக்கல் செய்யக்கூடியதாக பாதிக்கப்பட்டவர்களின் உரிமையைப் பாதுகாக்கும்.

இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட விசேட அறிக்கையில் இதனை தெரிவித்தனர்.

அதில் மேலும்,

“வாழ்நாள் முழுவதும் கோத்தபாய ஜனாதிபதியாக இருக்கமாட்டார் அத்துடன் அவர் இப்போது வலையில் தபபியிருந்தாலும் ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு பாதிக்கப்பட்டவர்கள் நீணட காலத்திற்கு கூட காத்திருக்க வேண்டிவரும் என்பதை இந்த தாமதம் குறிக்கின்றது. “ஒரு நாளைக்கு கோததபாயவின் பதவிக்காலம் முடிவுக்குவரும் போது நீதி சாத்தியமாகும் என்ற உண்மையினால் நாங்கள்
பலமடைந்துள்ளளதாக உணர்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.”

ITJP சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பெல்ட் LLP உடன் இணைந்து ஆரம்பத்தில் சித்திரவதையில் இருந்து
உயிர்தப்பிய றோய் சமதானம்1 என்பவரின் சார்பாக ஏப்பிரல் 2019 இல் மத்திய மாவட்டத்திற்கான அமரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் நட்டஈட்டு வழக்கினை தயார்செய்தார்கள். 26 யூன் 2019 இல் இந்த முறைப்பாடனது பாதுகாப்பிற்காக வேணடுமென்றே பெயர்கள் வெளியிடப்படாமல் மேலும் எட்டு தமிழர்கள், இரண்டு சிங்களவர்கள் என பத்து வழக்குத்தொடுநர்கள் சேர்க்கப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்பப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களில், திரு ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த பயங்கரமான மீறல்களை விபரித்துள்ளார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் சூடாக்கப்பட்ட இரும்புக்கம்பியால் சூடு வைக்கப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள், பெற்றோலில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தலைகளிற்கு மேலாக போடப்பட்டு மூச்சுத்திறணச் செய்யப்பட்டார்கள். அத்துடன் அவர்களில் ஆறு பேர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள்.

ஒரு தமிழ் வழக்குத்தொடுநர் 2009 இல் சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் மூன்று வருடங்களாக பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாக விபரிக்கின்றார். அவரும் வேறு இளம் தமிழ்ப் பெண்களும் இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டார்கள் அங்கு இரவு நேரங்களில் கடமையில் இல்லாத இராணுவத்தினர் எந்தப் பெண்ணை வெளியில் கொண்டு சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது என தெரிவு செய்வார்கள். அவர்கள் கற்பமாவதைத் தடுப்பதற்காக குடும்பக்கட்டுபப்பாடும் மேற்கொள்ளப்பட்டது. - என்றுள்ளது.

No comments