ஏவுகணை பரிசோதனை! வடகொரியாவுக்கு எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

வடகொரியா நெடுந்தொலைவு ஏவுகணைச்சோதனையை நடத்துமானால் அமெரிக்கா தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓப்ரையன் (Robert O'Brien) தெரிவித்துள்ளார்.


ஆயுதக்களைவு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதிய வழிமுறையை இம்மாத இறுதிக்குள் அமெரிக்கா முன்வைக்கத் தவறினால் அதற்கு 'கிறிஸ்துமஸ் பரிசு' வழங்கப்படும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
அந்தப் பரிசு நெடுந்தொலைவு ஏவுகணைச் சோதனையாக இருக்கலாம் என்று அமெரிக்க ராணுவத் தளபதிகள் நம்புகின்றனர்.
இருப்பினும், அதை எதிர்கொள்ள அமெரிக்காவின் 'ஆயுதக்கிடங்கில் பல ஆயுதங்கள் உள்ளன' என்று திரு. ராபர்ட் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments