குடியுரிமை ஆய்வுக்கு, ஈழத்தமிழர் முகாமுக்குச் சென்ற பத்திரிகையாளருக்கு வெளிவரமுடியாத வழக்கு!

ஈழத் தமிழர்கள் சொந்த நாடுகளுக்கு செல்வது தொடர்பான விவகாரத்தில், கணக்கெடுப்பு  எடுக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இலங்கை தமிழர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள் என்று சமீபத்தில் தெரிவித்திருநதார்.

இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்களது சொந்த தேசத்திற்கு திரும்புவதையே விரும்புகின்றனர். அவர்கள் இங்கு வசதியாக வாழ்வதையும் குடியுரிமை வழங்குவதையும் நானும் வரவேற்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை இங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் மனநிலை என்ன என்பது குறித்த பிரபல பத்திரிகையான விகடன் சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சர்வே எடுக்க மார்த்தாண்டம் பத்திரிகையாளர் மற்றும் புகைப்பட நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் அவர்களை வெளியேற்றியதுடன், அவர்கள்மீது  ஜாமினில் வெளிவர முடியாத சட்டத்தின்கீழ்  மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்துள்ளமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments