காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவேந்தல்

 வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 52 பேரின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02) இடம்பெற்றது.

செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில இடம்பெற்ற நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் 52 பேர் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் குறித்த நினைவு நாளினை செட்டிக்குளம் பகுதியில் துக்கதினமாக அனுஷ்டிப்பதுடன் நினைவுத் தூபி ஒன்றினையும் அமைக்கவுள்ளதாக செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோணி இதன்போது தெரிவித்தார்.
No comments