தேர்தல் நகர்வு:அரச பணியாளர் இடமாற்றம் இரத்து?


நாடாளுமன்ற தேர்தலினை முன்னிறுத்தி கோத்தா தனது நகர்வுகளை முன்னெடுத்துள்ளார்.இதன் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒதுக்கப்படவுள்ள 5மில்லியன் நிதியை முதலாம் மாதத்தினுள் செலவு செய்ய பணிப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதற்கேதுவாக எதிர்வரும் ஆண்டின் ஜனவரி முதல் மேற்கொள்ளவிருந்த சகல வருடாந்த இடமாற்றங்களையும் இடை நிறுத்துமாறு அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் சகல அமைச்சுக்கள் , திணைக்களங்கள் , மாகாண சபைகளின் கீழ் பணியாற்றும் பணியாளர்களிற்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் இடமாற்றத்தின் அடிப்படையில் ஜனவரி முதல் இடமாற்றப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த இடமாற்றங்கள் அனைத்தையும் இடைநிறுத்தும் அமைச்சரவைத் தீர்மானம் ஒன்று கடந்த அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறிப்பாக மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படலாமென்ற அடிப்படையில் வரும் ஆண்டிற்கான இடமாற்றம் முற்றாக தடைப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments