வெள்ளை வானை மூடப்பார்க்கும் கோத்தா!


தனது ஊடக பலம் மற்றும் காவல்துறை பலம் மூலம் வெள்ளை வேன் கதையினை பொய்யாக்கியுள்ள கோத்தபாய தற்போது அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் ராஜிதவை உள்ளே தள்ள இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி சி.ஐ.டி யால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்னாவின் கோரிக்கை அமைவாகவே அவ்வாறு கூறியதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்

சந்தேக நபர்கள் தங்களது அறிக்கையில் தாங்கள் ராஜித சேனாரத்னவிடம் இருந்து ரூ.3 மில்லியனை கோரியதாகவும்,பின்னர் 2 மில்லியன் ஆக குறைக்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக வீடும் , அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற நாட்டில் உள்ள தூதரகத்தில் வேலை பெற்றுத்தர ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் .

ஆனால் இவை அனைத்துமே காவல்துறையால் தயாரிக்கப்பட்டு அவர்களை கொண்டு பேச வைக்கப்படுவதாக தெற்கு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை வேன் விவகாரம் கோத்தாவின் கடந்த கால இருட்டு பக்கங்களை கிளறுவதாக அமையுமென்பதாலேயே அதனை ஆழப்புதைக்க மும்முரமாகியிருப்பதாக தெரியவருகின்றது.

No comments