அம்பாறையில் தமிழ் பிரதி இல்லாமல் செய்ய கருணா முயற்சி

அம்பாறையில் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் நோக்கமே கருணாவிடம் உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், கப்பம் பெறுதல் கடத்தலில் ஈடுபட்ட கருணா அம்பாறைக்கு வந்து நீலிக் கண்ணீர் வடிக்கத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மல்வத்தை அப்பிள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மல்வத்தை விபுலானந்ததா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments