16ஐ பெறுவது கேள்விக்குறி

கடந்த காலங்களைப் போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும் அதிகளாவன ஆசனங்களைப் பெறுவதில் நம்பிக்கை உள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள், மாற்று அணியின் பிரவேசம் காரணமாகவே பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புளொட் அமைப்பின் மத்திய குழு கூடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments