ஊடக சுதந்திரம் இருக்கும்; அடித்துக் கூறினார் கோத்தா

எனது நிர்வாகத்தில் ஊடக சுதந்திரத்துக்கு எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

இன்று (12) ஊடகத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மேலும்,

எந்தவிதமான நியாயமான விடயங்களையும் விமர்சிக்க வாய்ப்பளிக்கப்படும்.

சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரத்தில் உள்ளூர் ஊடகங்களின் நடத்தை பாராட்டத் தக்கது என்றும், சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகைள் வருத்தமளித்தன எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பல் "உதயன்" பணிப்பாளர் ஈ.சரவணபவனும் கலந்து கொண்டார்.

No comments