இன அழிப்பை மறக்கமாட்டோம்:தமிழ் தேசம்!


ஆட்சி மாற்றத்தின் பின்னராகவும் இனஅழிப்பினை நினைவுகூர மக்கள் பின்னிற்கவில்லை.இதன் தொடர்ச்சியாக  இலங்கை அரச படைகளால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு படுகொலை நிகழ்வுகளது 35வது ஆண்டைய நினைவேந்தல்கள் பொதுமக்களால் தன்னெழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவு ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று ஒதியமலை வாசிகசாலையில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டுள்ள தூபி பகுதியில் கிராம மக்கள் அணிதிரண்டு இன்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

1984 ஆம் ஆண்டு 34 பேர் ஒதியமலை பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதனிடையே சிங்களப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களது நினைவஞ்சலி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தனர். 

இதனிடையே வவுனியா செட்டிக்குளத்தில் 1984ம் ஆண்டின் இதே நாளன்று படுகொலை செய்யப்பட்ட 52 தமிழ் உறவுகளிற்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று திங்கட்கிழமை காலை வேளை அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் நடைபெற்ற நினைவேந்தலில் மதத்தலைவர்கள் மற்றும் கொல்லப்பட்ட உறவுகளது குடும்பங்கள் பங்கெடுத்திருந்தன. 


No comments