பாதுகாப்பு படைகளின் சீருடைகளுடன் ஒருவர் கைது

வத்தளை பிரதேசத்தில், சிவில் பாதுகாப்புப் படையினர் அணியும் பெருந்தொகையாக சீருடைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைக்கு அருகில் நேற்றிரவு நீர்கொழும்பு திசையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சந்தேகத்துக்கிடமான லொறியொன்றை கடற்படையினர் மற்றும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, குறித்த லொறியிலிருந்து சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் லொறியின் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர் உரிய பதிலளிக்க தவறியதால் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான லொறியை தமது பொறுப்பில் எடுத்த வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments