வாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு!


கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக நகர வளவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இரவு விசேட வாண வெடி நிகழ்வும் இடம்பெற்றது. நேரடி வெளிநாட்டு முதலீட்டு அடிப்படையில் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டமான இந்த திட்டம் 2014 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments