மூழ்கும் அபாயத்தில் மன்னார்

மன்னாரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலைமையில் காணப்படுவதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவடச் செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சி.ஏ.மோகன்றாஸ் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்திலுள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மன்னார் நகரில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 168 அங்கத்தவர்களும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 49 அங்கத்தவர்களும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 570 அங்கத்தவர்களும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 102 அங்கத்தவர்களும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 206 குடும்பங்களைச் சேர்ந்த 854 அங்கத்தவர்களும் வெள்ளப்பாதிப்புகளுக்கு உள்ளாகிய நிலைமையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

No comments