65ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு?


நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 19,072 குடும்பங்களைச் சேர்ந்த 65,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (23) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 10,105 குடும்பங்களைச் சேர்ந்த 33,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,920  குடும்பங்களைச் சேர்ந்த 16,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 5,185 குடும்பங்களைச் சேர்ந்த 16,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஊவா மாகாணத்தில் 1,623 குடும்பங்களைச் சேர்ந்த 5,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய மாகாணத்தில் 696 குடும்பங்களைச் சேர்ந்த 2,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments