ராஜித 3வது முறையாக முன் பிணை கோரி மனு

“வெள்ளை வான்” ஊடக சந்திப்புத் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (23) சற்றுமுன் மூன்றாவது முறையாக முன் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 19ம் திகதி குறத்த விவாகாரம் தொடர்பில் முன் பிணை கோரி தாக்கல் செய்த மனு மறுநாள் (20) நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே கோரிக்கை அடங்கிய மனுவை இரண்டாவது முறையாக அன்றையதினம் (20) ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்தார்.

குறித்த இரண்டாவது மனுத் தொடர்பான விசாரணை இன்று ஆரம்பமாகவிருக்கும் நிலையிலேயே மூன்றாவது மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

வெள்ளை வான் ஊடக சந்திப்பில் ராஜித சேனாரத்ன எழுதிக் கொடுத்த பொய்களை தாம் வெளியிட்டதாக வெள்ளை வான் சாரதிகள் என்று அறியப்படும் இருவரும் சிஐடியில் வாக்குமூலம் அளித்துள்ள நிலையிலேயே அவர் இந்த மனுவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.

No comments