முதலை அடித்து குடும்பஸ்தர் பலி?


கிளிநொச்சி ஊரியான் கிராமத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்த்தர் ஒருவரை முதலை இழுத்து சென்ற நிலையில் சடலமாக அவர் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர்  ஊரியானைப் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன் (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தனது இரண்டு மகன்கள் மற்றும் தந்தை ஆகியோருடன் குறித்த குளத்திற்கு  மீன்பிடிக்க சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீன்பிடிப்பதற்காக குளத்தில் இறங்கிய அவரை குளத்தில் காணப்பட்ட முதலை இழுத்துச் சென்றதாக அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர்,வன ஜீவராசிகள்  திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அக் கிராம இளைஞர்கள் இணைந்து குளத்தில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் சுமார் இரண்டுமணி நேர  தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

No comments