மன்னார் நகர சபை பட்ஜட் நிறைவேற்றம்

மன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (10) நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீட்டு வரைவு கடந்த மாதம் 21 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் மன்னார் நகர சபையின் 22 ஆவது அமர்வு இன்று மாலை 2 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மதிப்பீடு தொடர்பாக இன்றையதினம் சபையில் கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில் வரைவு சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

No comments