யாழ் விபத்தில் முதியவர் காயம்

யாழ்ப்பாணம் – புங்கன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (12) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ 9 வீதியிலிருந்து பயணித்த கெப்ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

No comments