சுவிஸ் தூதர ஊழியர் கடத்தல் இன்று நீதிமன்றுக்கு

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் இன்று (12 நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது என குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் ஊழியரிடம் இதுவரை 3 நாட்கள் சிஐடியினர் வாக்குமூலம் பெற்றனர்.
இந்த வாக்குமூலம் தொடர்பிலும், சிஐடியால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் தொடர்பிலும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன.

No comments