இலங்கைக்கு 25 மில்லியன் டொலர் வழங்க உலக வங்கி அனுமதி

இலங்கையின் முக்கிய அரச மற்றும் பொது நிதி மேலாண்மை நடவடிக்கைகளின் வெளிப்படைத்ததன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
பொதுத்துறை வினைத்திறனை வலுப்படுத்தும் திட்டம், நிதி அமைச்சின் நிறுவன ரீதியான திறனை வலுப்படுத்தி அதனுடாக வினைத்திறனை மேம்படுத்தவும் சிறந்த சேவைகளை வழங்கவும் உதவும். இந்த ஐந்தாண்டு திட்டதின் முக்கிய இயக்கிகளாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதிகரித்த மனித வளத்திறன்களின் பயன்பாடு அமைந்திருக்கும்.
முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் நிதி மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மானியமாக 10 மில்லியன் யூரோக்களை வழங்கி ஐரோப்பிய ஒன்றியம் திட்டத்தின் ஓர் பங்காளராக செயற்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

No comments