நாளை யாழ்.பல்கலையில் சூரியகிரகணம்?

 26 ஆம் திகதி நாளை வியாழக்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை இடம்பெறும்இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கும்அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35-09:38) மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (AnnularSolar Eclipse) இடம்பெறும்இந்த சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம்மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகம்இலங்கையின் தொழில்நுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதுதிருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தருகிலுள்ள மைதானத்திலும் கிளிநொச்சியிலுள்ள பொறியில் பீட நிர்வாக கட்டடத்திற்கு முன்பாகவும் இதற்கான ஏற்பாடுகளை யாழ் பல்கலைக்கழகம் செய்துள்ளதுஇவ்வரிய நிகழ்வினை அவதானிப்பதற்காக உள்நாட்டு வெளிநாட்டு கிரகண அவதானிப்பாளர்களும் விஞ்ஞானிகளும் ஆர்வம் கொண்டு யாழப்பாணத்திற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் நிமித்தம் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உயர்ரக தொலைநோக்கு காட்டிகளுடன் கூடிய முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனநாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் எட்டாம் தரம் முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சூரியகிரகணம் தொடர்பாக நடைபெற்ற தெரிவுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்இச்சூரியகிரகணத்தை இம்முகாமிற்கு வருகைதரும் ஆறாயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதனைப் பாதுகாப்பான முறையில் பார்வையிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஇணையவாயிலாக நாடேங்கிலுமுள்ள இரண்டாயிரத்திற்க்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளார்கள்ஆர்வலர்கள் http://event.jfn.ac.lk/eclipse/ எனும் இணையதளத்தில் தமது பதிவை முற்கூட்டியே கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றார்கள்திருநெல்வேலியில் அமைந்துள்ள அவதான முகாமின் நிகழ்ச்சி நிரலை பின்வரும் இணைய தளத்தில்   http://event.jfn.ac.lk/eclipse/index.php/programme/ பார்வையிடலாம்

No comments