ரணில் அமைச்சரவை ஊழலை ஆராயும் கோத்தா?


முன்னைய மகிந்த அமைச்சரவை ஊழல்களை ரணில் அரசு ஆராய்ந்த காலம் முடிவுற்று தற்போது ரணில் அமைச்சரவை ஊழல்களை கோத்தா தரப்பு ஆராய தொடங்கியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யும் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மோசடியை கண்டறிவதற்காக சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்க போக்குவரத்து சேவை அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

நேற்று குறித்த திணைக்கள அதிகாரிகளுடன் முன்னெடுத்த கலந்துரையாடலின் போது, ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் ஊடாக நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதியாகியுள்ளதென, அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட காலப்பகுதிக்குள் குறித்த நிறுவனத்தால் ஒப்பந்தத்துக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமைக் காரணமாக, அரசாங்கத்துக்கு பாரிய நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அந்த  நிறுவனம் தொடர்பில் விசாரிப்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

விசாரணைகளின் போது அந்த நிறுவனம் இலங்கைக்குள் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதை தடை செய்யவும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

No comments