காவலரணை தாக்கி ஆயுதம் கொள்ளை!


வவுனியாவிலுள்ள இராணுவ சோதனை சாவடியொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கு கடமையிலிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறித்து சென்றுள்ளனர்.

வவுனியா போகஸ்வௌ இராணுவ சோதனை சாவடி மீது கும்பலொன்று தாக்குதல் நடத்தி அங்கிருந்த ஆயுதத்தை பறித்து சென்றுள்ளது.

இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீசப்பட்ட நிலையில் ஆயுதம் மீட்கப்பட்ட போதும் எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை.

போகஸ்வௌ வவுனியாவின் எல்லைக்கிராமங்களுள் ஒன்றாகும்.

No comments