சிவாஜியை அழைத்தது ரிஐடி

தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வருடா வருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாக குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் நாளை மறுதினம் (27) கொழும்பு நலாம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிற்கு விசாரணைக்கு வருமர்று விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்றையதினம் சிவாஜிலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னைய ஆட்சிக் காலங்களிலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயங்கரவாதப் பிரிவினரால் சிவாஜிலிங்கம் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments