சாவகச்சேரி நகரசபையும் தோற்கடிக்கப்பட்டது?


ஈபிடிபி ஆதரவுடன் கூட்டமைப்பு கைப்பற்றிக்கொண்ட உள்ளுராட்சி மன்றங்களது வரவு செலவு திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டுவருகின்ற நிலையில் தற்போது சாவகச்சேரி நகரசபை வரவு செலவு திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் இன்றைய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய தேசியக்கட்சியுடன் வரதராஜப்பெருமாள் தரப்பு ஆதரவாகவும் எதிர்த்து ஈபிடிபி மற்றும் பொதுஜனபெரமுனவுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வசம் வீழ்ந்திருந்த சாவகச்சேரி நகரசபையினை ஈபிடிபி ஆதரவுடன் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சி பீடமேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  

No comments