எம்சிசி ஒப்பந்ததுக்கு இணங்கினால் அரசில் இருக்க மாட்டேன்

மிலேனியம் சவால் உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் அரசாங்கத்தில் தாம் அங்கம் வகிக்கமாட்டோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாணந்துரையில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்ச்சைக்குரிய மிலேனியம் சவால் உடன்படிக்கை குறித்து ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த கலந்துரையாடியபோது, ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதற்கமைய, மிலேனியம் சவால் உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக பேராசிரியர் அஸித்த சிறி குணருவான் உள்ளிட்டோர் அடங்கிய குழு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் மிலேனியம் சவால் உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் அரசாங்கத்தில் நாம் அங்கம் வகிக்கமாட்டோம். அவ்வாறு நடைபெற மாட்டாது” என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments