உறுதி மொழியின்றி விடுவிக்க வேண்டாம்!


இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி அவர்களின் படகுகளை மீள கையளிக்கும் போது மீள இலங்கை கடலினுள் அத்துமீறாமை தொடர்பில் உறுதி மொழியை பெற்றுக்கொள்ளவேண்டுமென வடக்கு மீனவ அமைப்புக்கள் கோரியுள்ளன.அதே நேரம் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களிற்குச் சொந்தமான படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவில் இருந்து எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நேரம் கைப்பற்றப்படும் படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி அவற்றை மீள ஒப்படைக்க அண்மைய டெல்லி சந்திப்பில் கோத்தபாயவால் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேநேரம் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட சமயம் கைப்பற்றப்படகுகள் மட்டுமன்றி உயிரைக் காப்பதற்காக தாய்த் தமிழகத்திற்கு தப்பிச் சென்ற சமயம் ஈழ மீனவர்களின் படகுகள் இயந்திரங்களை பறிமுதல் செய்த இந்திய அரசு அவற்றினை இன்றுவரை தடுத்து வைத்துள்ளது.. இவ்வாறு உயிர் காக்கச் சென்ற சமயம் கைப்பற்றப்பட்ட படகுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த படகுகள் மட்டும் 141 படகுகள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பிலும் கவனம் செலுத்துவதோடு இந்திய இலங்கை மீனவர்களின் நேரடிப் பேச்சுவார்த்தைகளும் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென மன்னார் மீனவ அமைப்புக்கள் கோரியுள்ளன.

No comments