லலித்,குகன் கடத்தல் விவகாரம்:கோத்தாவிற்கு சலுகை!


சிவில், சமூக செயற்பாட்டாளர்களான, லலித் மற்றும் குகன் ஆகியோரைத் தேடிக் கண்டுப்பிடித்துத் தருமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில், கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாவதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜராகுவதை தடுத்து விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ருவன் பெர்ணான்டோவால், நேற்று (03) நீடிக்கப்பட்டது.
முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்களாகச் செயற்பட்ட லலித், குகன் ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறும், சாட்யளிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை (பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்) ஆஜராகுமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட கட்டளையைக் கைவிடுமாறு, ​மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட கட்டளைக்கு எதிராக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பை சமர்ப்பிப்பதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும், 2011ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளனர் என்றும், அவ்விருவரையும் தேடி கண்டுப்பிடித்துத் தருமாறு, அவ்விருவரது குடும்பத்தினரும், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments