இறந்து ஆறு மணிநேரமானவரை உயிர்ப்பித்த மருத்துவர்கள்!

ஸ்பெயினைச் சேர்ந்த ஆட்ரே மாஷ். 34 வயதான பெண் தனது கணவருடன் சேர்ந்து மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ஆட்ரேவை உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து சுமார் 6 மணிநேரம் கழித்து ஆட்ரே மாஷ்  இதயம் மீண்டும் துடிக்க, அவர் மூச்சு விடுவது தெரிந்துள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு சீரான சிகிச்சை கொடுக்கப்பட்டபின் அவர் மீண்டும் சீரான நிலைக்கு வந்துள்ளார்.


இதுகுறித்துப் பேசியுள்ள மருத்துவர், “உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் அவர் மீண்டும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. ஆனால் உடலில் காணப்பட்ட தாழ் வெப்பநிலை, அவரது மூளையை பாதிக்காமலிருந்துள்ளது. அதனால் தான் அவர்  6 மணிநேரம் கழித்து உயிர்பிழைத்துள்ளார். ஸ்பெயினில் 6 மணி நேரம் இதயத்துடிப்பின்றி இருந்து பின் உயிர் பிழைத்துள்ளது இதுவே முதன்முறை என்று ஆச்சரியம் குறையாமல் கூறியுள்ளார்.

No comments