கொழும்பில் வெள்ளைவான்:அவசர சந்திப்பில் சுவிஸ் தூதர்!


கொழும்பில் சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக்குக்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று, நேற்று (27) மாலை நடைபெற்றுள்ளது. 

கொழும்பிலுள்ள இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தில் பணியாற்றும், பெண் பணியாளர் ஒருவர், கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் போது, மேற்படி விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.

தமது பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அப்போது கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டிலிருந்து தப்பி ஓடிய காவல்துறை அதிகாரி கோத்தபாய உத்தரவில் ஆட்கள் கடத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றிருப்பதாக சொல்லப்படும் நிலையிலேயே இக்கடத்தல் நடந்துள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முற்பட்டுள்ளவர்களினுடையதென தெரிவிக்கப்படும் பட்டியல் ஒன்றை இராணுவபுலனாய்வு பிரிவு தன்வசம் வைத்திருந்தே விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக சொல்லப்படுகின்றது.

No comments