யாழ்.மாநகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள யாழ்.மாகரசபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதனை மக்கள் விரோத பட்ஜெட் என தெரிவித்து வாக்கெடுப்பில் எதிர்கட்சிகள் தோல்வியுறச்செய்துள்ளன.

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் சிறுபான்மை பலத்துடன் ஈபிடிபி ஆதரவுடன் ஆட்சியினை அமைத்துக்கொண்ட ஆனோல்ட் தலைமையிலான ஆட்சியின் வரவு செலவு திட்டமே தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆட்சி அமைக்க ஆதரவளித்த ஈபிடிபியும் இணைந்தே வாக்களிப்பினில் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்துள்ளன.

இதனிடையே குறித் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் மக்களிற்கு தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்புக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பவை தற்போது நடத்திவருகின்றன.

No comments