கோத்தாவின் வெள்ளைவான்:கதறியடிக்கும் பெரமுன!


கோத்தாவின் வெள்ளைவான் விவகாரம் தமிழ் பிரதேசங்களில் கடும் கோபங்களை தோற்றுவித்துள்ள நிலையில் அவசர அவசரமாக கோத்தா பங்காளிகள் ஊடகங்களை சந்தித்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுஐன பெரமுனவின் யாழ் அலுவலகத்தில் அவசர ஊடக சந்திப்பு நடத்தி விளக்கமளித்துள்ளனர்.

ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாயாவை ஆதரிக்கும் வடக்கு முன்னாள் ஆளுநர் ரெஜினால்ட் கூரே,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். வடக்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, பொதுஐன பெரமுன யாழ் அமைப்பாளர் ரஜீவ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வெள்ளை வான் சாரதியை ஏன் காவல்துறையிடம் கையளித்திருக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்த அங்கஜன் மாவீரர் தினத்தை கொண்டாட கோத்தா அனுமதிப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை திட்டி தீர்த்த இவர்கள் சிங்கள மக்கள் விழிப்புடன் இருப்பதாகவும் தமிழ் மக்களே ஏமாளிகள் எனவும் தெரிவித்தனர்.

No comments