இந்தியாவின் முதன்மை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்;

இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டம் அதிகாலை தொடங்கியது. கல்லூரி விடுதிக் கட்டண உயர்வு, ஆடைக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பார்த்தசாரதி ராக்ஸில் நுழைவதற்கு நிர்வாகத்தின் கட்டுபாடுகள், மாணவர்களின் யூனியன் அலுவலகத்தை பூட்டுவதற்கான முயற்சிகளையும் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு விடுதி, மெஸ் கட்டணம் மற்றும் பாதுகாப்பு கட்டணத்தை 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விடுதி, மெஸ் கட்டணம் மற்றும் பாதுக்காப்பு கட்டணம் ரூ. 2000 -2500 என்று இருந்த நிலையில் தற்போது 7,000- 7500 வரை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்' ஆகியோர் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகின்றனர்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கவுன்சில் நோக்கி போராட்ட மாணவர்கள்  செல்ல முயன்றனர். அங்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றுகிறார். உள்ளே செல்ல தடை செய்யப்பட்டுள்ளன என்று பிடிஐ தெரிவித்துள்ளது.
“கட்டண உயர்வு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைப் பாதிக்கும். தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பணம் செலுத்த முடியாமல் கல்வியைப் பெற இந்த கட்டண உயர்வு மறுக்கிறது.” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியின் புதிய அறிக்கையின் படி அக்டோபரில் ஜே.என்.யூ இண்டர்ஹால் நிர்வாகம் வெளியிட்டது. கூட்டங்களை நடத்துவதற்கு 5 நாள் முன்பு அனுமதி வாங்க வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் கூட்டம் நடத்தப்படக்கூடாது. விடுதி மாணவர்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டன.

மாணவர்களின் தங்களின் கோரிக்கைகளை துணைவேந்தர் மமிடலா ஜெகதீஷ் குமாரிடம் சொல்ல முயன்றபோதும் அவர்களை சந்திக்க மறுத்துள்ளதாக மாணவர்களின் அமைப்பு தெரிவிக்கிறது.

No comments