எம்மையும் விடுவியுங்கள் வெடித்தது போராட்டம்

மரண தண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்த நிலையில் தம்மையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கொலை குற்றம் புரிந்த குற்றவாளியொருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments