கோத்தவின் வெள்ளை வானே கடத்தியது?

வௌ்ளைவான் கலாசாரத்தை, நாட்டில் மீண்டும் உருவாக்கவேண்டாமென  கோத்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிரான பழிவாங்கல்களை நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளார். 
அத்துடன், வௌ்ளைவான் கலாசாரம் மீண்டும் திரும்பியிருக்கிறதா என வினவினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (28) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,   குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நாட்டிலிருந்து வெளியேற முடியாத வகையில் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சகலரினதும் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தியுள்ளமை தவறானதாகும் என்றார்.  
இராணுவம் காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டதாக அன்று தெரிவித்தவர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இன்று காட்டிக்கொடுக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரை பழிவாங்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். 
அந்தத் திணைக்களத்திலுள்ள அதிகாரிகள் யுத்த காலத்தில் விசேட கடமையாற்றியவர்கள் எனவும், அவர்களை சர்வாதிகார போக்கில் வழிநடத்த வேண்டாமெனவும், அன்று இராணுவம் செய்ததைப் போலவே குப்பை தூக்கும் நிலைமைக்கு பொலிஸார் இன்று ஆளாகியுள்ளனர் என்றார்.  
இவ்வாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு முடக்கப்பட்டால், குற்றச்செயல்கள் மீண்டும் நாட்டுக்குள் அதிகரிக்குமெனத் தெரிவித்த அவர், 2014ஆண்டு  யுகத்துக்கு மீண்டும் நாட்டை கொண்டு செல்ல வேண்டாமெனவும் சாடினார். 
மறுமுனையில் இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்று பெண் பணியாளர் ஒருவர், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வாகனமொன்றில் பலவந்தமாக ஏற்றிச்செய்யப்பட்டதாகவும், அதிகாரியொவருக்கு வீசா வழங்கியமையாலேயே அந்தப் பெண் பணியாளருக்கு இந்த நிலைமை ஏற்பட்டதெனவும் அவர் தெரிவித்தார். 
எனவே, வௌ்ளைவான் யுகத்துக்கு நாட்டை, மீண்டும் கொண்டு செல்லவேண்டாமெனவும், அதற்காக நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

No comments