தேர்தலை புறக்கணக்காதீர்கள்

தேர்தலை எந்தக் காரணம் கொண்டும் தமிழ் மக்கள் புறக்கணிக்கக்  கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதி பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் பூர்த்தியடையும் நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் வகையிலான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இன்று (புதன்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் மட்டக்களப்பில்  தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோசம் எழுந்தது. அது எழுந்த மாத்திரத்தில் அணைந்துவிட்டது. எமது பகுதிகளில் அவ்வாறான பிரசாரங்கள் இல்லை.
எமது பகுதி மக்கள் தேர்தலை எக்காரணம் கொண்டும் பகிஷ்கரிக்காமல் வாக்களிக்கவேண்டும். அதிகளவான வாக்குகளை தமிழ் மக்கள் அளிக்கவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

No comments