கோத்தா தமிழரை எதுவும் செய்ய மாட்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிழைகளையும் செய்ய மாட்டார் என மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.செல்வகுமரன் டிலான் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“தமிழர்களின் நினைவேந்தலை தடுத்து நிறுத்துவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிடுகின்றன.
குறித்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது. குறித்த செய்தியை கண்டிக்கின்றோம். அந்த ஊடகங்களின் பின்னணியில் அரசியல் தலையீடுகள் இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மத்தியில் தவறான ஒரு கருத்தை கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர்” என மேலும் தெரிவித்தார்.

No comments