பிரச்சாரத்தை தடுக்கு பேஸ்புக்கிடம் கோரிக்கை

கட்டணம் செலுத்தப்பட்ட அரசியல் விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், இவ்வாறு விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில், வேட்பாளர்களுக்கான பிரசாரம் பேஸ்புக்கில் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் வகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்கள், வாக்காளர்களின் சுயாதீன தீர்மானங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments