தமிழ் திரையுலகில் புதுமை பொய்யாவிளக்கு!

பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம்.  அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது.   இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

தமிழ்நாடு தமிழ்த்திரைத்துறை நூறு வருடபழமை வாய்ந்தது. ஈழ தமிழ் சினிமாவும் நாற்பது வருடத்திற்க்கு மேல் இருந்தாலும் தொண்ணூறுகளின் பின்னர் தான் உச்சம் பெற்ற படைப்புகள் வந்தன. இது தவிர புலம் பெயர் தமிழர்களின் ஐரோப்பிய மேற்கு உலக சார்ந்த படங்களும் கடந்த இருபது வருடங்களாக வந்துள்ளன.

பொய்யா விளக்கு இவை எல்லாவற்றிலும் இருந்து புதியதொரு பாதையில் பயணிக்கிறது. உலக தமிழர் ஆதரவு இருந்தால் எங்கள் இயக்குனர்கள் எதிர்காலத்தில் உலகத்தரமான தமிழ் சினிமாவை தர நிச்சயமாக இதன் வெற்றி உதவும்.

ஈழ வரலாறு வலிகள் பல சுமந்தாலும் அங்கு புறநானூற்றை மேவிய வீரமும் தியாகமும் கொட்டி  கிடக்கின்றது. புலம் பெயர் தமிழ் சமூகத்தின் வருங்காலப் பிள்ளைகளும்,  உலகமும் ஈழத்தின் வரலாற்றினை அறிய திரைப்படங்கள் சிறந்த ஊடகமாக இருக்கிறத. பொய்யா விளக்கு அடுத்து வரும் தலை முறைக்காக எடுக்கப்பட்டுள்ள படம்.
 ஒரு தேர்ச்சி பெற்ற நடிகரைப்போல அற்புதமான நடிப்பினை வைத்தியர் வரதராஜா கொண்டு வந்திருக்கிறார். இனிமையான பாடல்களும், ஒளிப்பதிவும், கதை நகர்கின்ற வேகமும் இந்தப்படத்தினை ஒரு முழுமையான படைப்பாக அடையாளப்படுத்துகிறது. எல்லோரும் பார்க்க வேண்டிய படைப்பு!!!

No comments