சுடலை ஞானம் பெற்ற தென்னிலங்கை ஊடக அமைப்புக்கள்!


புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் தெற்கை மையப்படுத்தி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் வேட்டையாடப்படுகையில் தெற்கு ஊடப்பரப்பு பரபரப்பாகியுள்ளது.

குறிப்பாக ஜக்கிய தேசியக்கட்சி ஆதரவு ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து புதிய அரசு வேட்டையாடலை ஆரம்பித்துள்ளது.

அதன் முதல்படியாக சிங்களப் பெண் ஊடகவியலாளர் துஸாரா விதானா கொழும்பில் உள்ள இலங்கைக் குற்ற்வியல் திணைக்களத்தின் நான்காம் மடியில் வைத்து விசாரணைக்கு உடபடுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை சுமார் நான்கு மணித்தியாளங்கள் விசாரணை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஊடக அதிகாரியாகச் செயற்பட்ட துஸாரா விதானா இணைய ஊடகங்களின் ஆசிரியராகவும் செயற்பட்டுவருகின்றார்.

2005 முதல் 2015 வரையாக மகிந்த ஆட்சிக்காலமான பத்துவருடத்தில் வடகிழக்கில் 39 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டோ இருந்தனர்.

அப்போது தென்னிலங்கையின் கணிசமான தரப்புக்கள் வேடிக்கை பார்த்தே வந்திருந்தன. 

இந்நிலையில் தற்போது தெற்கில் அத்தகைய சூழல் ஏற்படலாமென்ற அச்சத்தில் தென்னிலங்கை ஊடக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.

No comments