சஜிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி

ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரரமசிங்கவுக்கும் இடையில் இன்று (29) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருப்பதாகவும், அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாகவுமே இணக்கம் காணப்பட்டுள்ளது.

No comments