தூக்குவேன் என்கிறது சக்தி!


அம்பாறை மாவட்டத்தில் உள்ள குப்பை மேட்டின் மீது யானைகள் இரைதேடும் காட்சியைக் கொண்ட ஒளிப்படத்தை தனது முகநூலில் பகிர்ந்த ஊடகவியலாளருக்கு சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட பெண்ஒருவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.



அம்பாறை மாவட்டத்தில் உள்ள குப்பை மேட்டு பகுதியில் யானை கூட்டம் ஒன்று குப்பைகளை உணவாக உட்கொள்ளும் ஒளிப்படம் ஒன்று முகநூலில் வெளியாகி இருந்தது. அதனை யாழப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரும் பகிர்ந்திருந்தார்.



அந்த ஒளிப்படத்தை தனது முகநூலில் பதிவிட்ட சில நிமிடங்களில் ஊடகவியலாளரின் அலைபேசிக்கு, 112610281 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தன்னை சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.



தங்கள் முகநூலில் பதிவிட்டுள்ள படம் எங்கே இருந்து எடுத்தீர்கள் ? என வினாவிய போது, ஊடகவியலாளர் தான் முகநூலில் இருந்தே இந்த படத்தை பெற்றேன் என கூறியுள்ளார்.

“அந்த படத்தை உடனடியாக முகநூலிருந்து தூக்குங்கள், இல்லை எனில் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என மிரட்டும் தொனியில் கூறிவிட்டு தனது தொலைபேசி அழைப்பை துண்டித்துக்கொண்டார்.


ஊடக சுதந்திரம் உயர்ந்தபட்சம் பாதுகாக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்து வெளியிட்டு ஒரிரு தினங்களுக்குள் இந்த மிரட்டல் யாழ்ப்பாணம் ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

No comments